கனகவதியாக மாறும்போது...வைரலாகும் ருக்மிணி வசந்த் பகிர்ந்த வீடியோ

காந்தாரா: சாப்டர் 1 படத்தில் கனகவதி என்ற கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் நடித்திருந்தார்.
சென்னை,
காந்தாரா: சாப்டர் 1 படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் கனகவதி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ருக்மிணி வசந்த் நடித்திருந்தார்.
இந்நிலையில், ருக்மிணி வசந்த் தற்போது தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கனகவதியாக மாறும்போது என்ற தலைப்பிட்டு இதனை பகிர்ந்துள்ளார்.
ருக்மிணி வசந்த் அடுத்து டாக்ஸிக் படத்தில் நடிகர் யாஷுடனும், ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story






