"பேருக்குத்தான் பிக்பாஸ் ஷோ.. ஆனால்.."- நடிகை அன்சு ரெட்டி காட்டம்


பேருக்குத்தான் பிக்பாஸ் ஷோ.. ஆனால்..- நடிகை அன்சு ரெட்டி காட்டம்
x

நடிகை அன்சு ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து காட்டமான கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் வெளியாகும் சீரியல்களில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் அன்சு ரெட்டி, படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து காட்டமான கருத்துகளை அவர் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘பேருக்குத்தான் தெலுங்கு பிக்பாஸ் ஷோ. ஆனால் தெலுங்கு சரியாகப் பேசத் தெரியாத, தெலுங்கு அல்லாத நடிகர்களை சேர்க்கிறார்கள். அது ஏன்? என்பது எனக்குப் புரியவில்லை. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெலுங்கு பேசுவது அடிப்படை அளவுகோலாகும்.

பிக்பாஸில் சேர விரும்பும் பல தெலுங்கு நடிகர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. அங்கு எத்தனை தெலுங்கு நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது? எப்போதுதான் மாறுவீர்கள்?'', என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்சு ரெட்டிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story