மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ‘பைசன்’ படக்குழு வாழ்த்து


மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ‘பைசன்’ படக்குழு வாழ்த்து
x

இயக்குனர் மாரி செல்வராஜ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குனர் மாரி செல்வராஜ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நமது நாட்டிற்கான வெற்றி என்பது மிகவும் பெருமைமிக்க கர்ஜனை. மதிப்புமிக்க உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story