நகைச்சுவை நடிகர் புகழின் தந்தை காலமானார்

நடிகர் புகழ் தனது தந்தை இறந்துவிட்டார் என்பதை மனமுடைந்து பதிவு செய்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் முதலில் சாதித்து பின் வெள்ளித்திரை வந்தவர் நகைச்சுவை நடிகர் புகழ். இவர் 'குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்' என்ற நிகழ்ச்சிகளில் தனது திறமையை நிரூபித்து அதன்மூலம் திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர். அந்த வகையில், "எதற்கும் துணிந்தவன், டிஎஸ்பி. அயோத்தி, யானை' உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.
இந்த நிலையில், நடிகர் புகழ் தனது சமூக வலைத்தளத்தில் சோகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தனது தந்தை (எம்.எல்.முருகன்) இறந்துவிட்டார் என்பதை மனமுடைந்து பதிவு செய்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வெளியிட்ட பதிவில், "அப்பா என் கிட்ட சொல்லாமா எங்கேயும் போக மாட்டிய தெய்வமே இப்படி சொல்லாம போயிட்டியே" என்று உருக்கமாக பகிர்ந்து இருக்கிறார். இவரது தந்தையின் மறைவுச் செய்தி வெளியானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் புகழுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.






