'என் கெரியரில் மிக மோசமான வேடம்'... பிரபல நடிகையின் அதிர்ச்சியூட்டும் கருத்துகள்

டெல்லி கிரைம் தொடரின் மூன்றாவது சீசன் வருகிற 13 அன்று நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
மும்பை,
பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி தற்போது வெப் தொடர்களில் பிஸியாக உள்ளார்.டெல்லி கிரைம் என்ற தலைப்பில் வெளியாக இருக்கும் அதன் மூன்றாவது சீசனில் ஹுமா குரேஷி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹுமா குரேஷி இந்த தொடரில் பாடி தீதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இரண்டு சீசன்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன நிலையில், மூன்றாவது சீசன் வருகிற 13 அன்று நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
இந்த சூழலில், சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஹுமா குரேஷி பேசுகையில், 'டெல்லி கிரைம்' - சீசன் 1 மற்றும் சீசன் 2 இன் மிகப்பெரிய ரசிகை. இதில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தபோது, ஒரு குழந்தை தனக்கு பிடித்த பொம்மையுடன் விளையாடுவதுபோல் உணர்ந்தேன். இதில் என் கதாபாத்திரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது என் கெரியரில் நான் நடித்த மிக மோசமான கதாபாத்திரம்’என்றார்.







