கைவிடப்பட்டதா தேவரா 2? - அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

‘தேவரா 2’ கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
சென்னை,
ஜூனியர் என்டிஆரின் 30-வது படமான ‘தேவரா பாகம் 1’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூலித்தது. கொரட்டலா சிவா இயக்கிய இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சமீபத்தில் தேவரா படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ‘தேவரா 2’ படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ‘தேவரா 2’ கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் ப்டக்குழுவினரிடமிருந்து அப்டேட்டுக்காக காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், பிரசாந்த் நீல் இயக்கும் டிராகன் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாக தெரிகிறது.






