தனுஷின் “தேரே இஷக் மெய்ன்” டிரெய்லர் வெளியானது
தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ பாலிவுட் படம் வருகிற 28-ம் தேதி வெளியாகிறது.
நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தில்லியில் துவங்கியது. ஆனந்த் எல் ராய் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார்.
‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பை, ஐதராபாத், டெல்லி போன்ற பகுதிகளில் நடைபெற்றது. இந்த படமானது வருகிற 28-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ராஞ்சனா கதையுடன் தொடர்புடைய படமாக உருவாகலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. காதல், ஆக்சன் காட்சிகளுடன் கூடிய ஏ. ஆர். ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த நிலையில், தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.







