தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தின் அறிவிப்பு

தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தின் அறிவிப்பு

பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'பவர் பாண்டி, ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதனை தொடர்ந்து தற்போது 'நிலவு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 7-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும் இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படம் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு 'தேரே இஷ்க் மெய்ன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் திரிப்தி டிம்ரி, தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com