பிரேம்ஜி நடிக்கும் "வல்லமை" டீசர் வெளியீடு!

கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜி நடிக்கும் “வல்லமை” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரேம்ஜி நடிக்கும் "வல்லமை" டீசர் வெளியீடு!
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக பிரேம்ஜி கதாநாயகனாக வல்லமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார். ஜிகேவி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் குமார் படதொகுப்பை செய்துள்ளார்.

"வல்லமை" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்தப் படத்தில் திவ்ய தர்ஷினி, தீபா சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் கருப்பையா முருகனே எழுதியுள்ளார்.

இந்நிலையில் பிரேம்ஜி நடிக்கும் "வல்லமை" படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் வெங்கட் பிரபு, லிங்குசாமி, சீனு ராமசாமி ஆகியோர் இப்படத்தின் டீசரை வெளியிட்டனர். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com