’மகுடம்’ படத்திலிருந்து விலகிய இயக்குனர்...விஷால் எடுத்த அதிரடி முடிவு

மகுடம்’ படத்தின் 2வது லுக் போஸ்டரை விஷால் வெளியிட்டுள்ளார்.
Director walks out of 'Makudam'...Vishal takes drastic decision
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் தற்போது 'மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக மகுடம் படத்திலிருந்து இயக்குனர் ரவி அரசு விலகினார்.

இதனையடுத்து இப்படத்தை யார் இயக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், மகுடம் படத்தின் 2வது லுக் போஸ்டரை வெளியிட்டு `மகுடம்' படத்தை தானே இயக்கப்போவதாக விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் விஷால் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com