

சென்னை,
ராஷ்மிகா மந்தனா தற்போது ஸ்டார் ஹீரோ படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதே நேரத்தில், பெண்களை மையமாகக் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தம்மா படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா, விரைவில் தி கேர்ள் பிரண்ட் படத்தின் மூலம் நம்மிடம் வரவுள்ளார்.
தேசிய விருது பெற்ற ராகுல் ரவீந்திரன், இந்த படத்தை இயக்குகிறார். தசரா புகழ் தீட்சித் ஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள், டீசர்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இப்படம் வருகிற 7-ம் தேதி வெளியாக உள்ளது. இதனால், படக்குழு புரமோஷனில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், படம் பற்றி பல சுவாரசியமான விஷயங்கள் வெளியாகி வருகின்றன.
தி கேர்ள் பிரண்ட் படத்திற்கு ராஷ்மிகா மந்தனா முதல் தேர்வாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இதை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், 'நான் ஒரு கதையைத் உருவாக்கும்போதெல்லாம், அதை என் நண்பர்கள் வெண்ணிலா கிஷோர், சமந்தா, அதிவி சேஷ், சுஜீத் ஆகியோரிடம் நிச்சயமாகக் காண்பிப்பேன். இது எனது பழக்கம். எனவே நான் தி கேர்ள் பிரண்ட் கதையை சமந்தாவிடம் கொடுத்தேன்.
அவர் முழு கதையையும் படித்துவிட்டு இந்தப் படம் எனக்கு சரியாக இருக்காது, ராஷ்மிகாவிடம் கூறுங்கள் என்று அறிவுறுத்தினார். இதனால், கதையை நான் ராஷ்மிகாவுக்கு அனுப்பினேன். அவர் இரண்டு நாட்கள் படித்து ஓகே சொன்னார் என்றார்.