

அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் மாஸ்க் படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆண்ட்ரியா வில்லியாக நடித்திருக்கிறார். இப்படத்தை சொக்கலிங்கத்துடன் இணைந்து ஆண்ட்ரியா தயாரித்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாவுள்ளது.
இந்த நிலையில், இதன் புரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் கவின், மாஸ்க் திரைப்படத்தைப் பார்க்க வரும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை கட் அடித்துவிட்டு திரையரங்கம் செல்ல வேண்டாம். உங்கள் கல்லூரி கடமைகளை முடித்துவிட்டு சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் நண்பர்களுடன் சென்று பார்க்கலாம். சினிமா என்பது எண்டர்டெயின்மெண்ட். அதனால், அதற்குள் எண்டர் ஆகி உடனே எக்ஸிட் ஆகவும் வேண்டும். அதுதான் நல்லது எனத் தெரிவித்துள்ளார்.