பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' - வைரலாகும் செகண்ட் லுக்


Dude - Second Look
x
தினத்தந்தி 11 May 2025 2:41 PM IST (Updated: 5 July 2025 4:45 PM IST)
t-max-icont-min-icon

பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிக்கிறார்.

சென்னை,

'லவ் டுடே' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம் 'டிராகன் '. தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனின் புதிய பட அறிவிப்பு வெளியானது. அப்படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார்.

மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்திற்கு 'டியூட்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் இந்தாண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தநிலையில், தற்போது இதன் செகண்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story