'அந்தக் காட்சிக்குப் பிறகு உண்மையிலேயே அழுதேன்' - ஈஷா ரெப்பா


Eesha Rebba: I actually cried after that scene
x

ஈஷா ரெப்பா தற்போது நடித்துள்ள காதல் நகைச்சுவை படம் 'ஓம் சாந்தி சாந்தி சாந்தி'

சென்னை,

தெலுங்கு பட இயக்குனரும் நடிகருமான தருண் பாஸ்கர் மற்றும் நடிகை ஈஷா ரெப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள காதல் நகைச்சுவை படம் 'ஓம் சாந்தி சாந்தி சாந்தி'. இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் ரீமேக்கான இந்தப் படம், பார்வையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை ஏ.ஆர். சஜீவ் இதை இயக்கியுள்ளார்.

வருகிற 30 ஆம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில், நடிகை ஈஷா ரெப்பா ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது படத்தின் சில காட்சிகள் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் பேசுகையில், ‘படத்தில் அறைவது தொடர்பான பல காட்சிகள் இருக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும். அந்த காட்சிகள் சிறப்பாக வர வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். ஒரு காட்சியில் தருண் பாஸ்கர் கையில் சட்னியோடு என்னை நிஜமாகவே அறைந்தார். அந்த காட்சி முடிந்த பிறகு, சுமார் 10-15 நிமிடங்கள் அழுதேன்’ என்றார்.

1 More update

Next Story