எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டியை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் திரண்டனர்.
சென்னை,
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு தைத்திருநாளை மக்கள் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டியை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் திரண்டனர்.
இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். விவசாயிகள் நன்றாக இருக்க வேண்டும். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்” என்றார்.
Related Tags :
Next Story






