ஸ்ரேயாஸ் ஐயரை திருமணம் செய்து 2 குழந்தைகள் இருப்பதாக கூறும் பிரபல நடிகை


Famous actress who claims to be married to Shreyas Iyer and has 2 children
x

நடிகை எடின் ரோஸ் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

சென்னை,

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருபவர் எடின் ரோஸ்.

அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

''என் மனதளவில் கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை திருமணம் செய்து, அவரின் 2 குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்து வருகிறேன். ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தமிழரான என் தந்தையை போல் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒரு தென்னிந்தியர்''இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story