'கோட்' - இரண்டாவது பாடலின் புரோமோ வெளியீடு

'கோட்' படத்தின் 2வது பாடல், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாக உள்ளது.
'கோட்' - இரண்டாவது பாடலின் புரோமோ வெளியீடு
Published on

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் 2வது பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. இப்பாடல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், 'கோட்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, 2வது பாடலான 'சின்ன சின்ன கண்கள்' நாளை வெளியாக உள்ளநிலையில் அதன் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com