“கடவுள் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார்”- நடிகர் பாபி தியோல்

நடிகர் பாபி தியோல் பேட்டி ஒன்றில், தான் குடிப்பழக்கத்தை நிறுத்தியது குறித்து பேசி இருக்கிறார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் பாபி தியோல். `பர்சாத்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் சந்தீப் ரெட்டி இயக்கிய `அனிமல்' படத்தில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து தமிழில் `கங்குவா' படத்திலும், தெலுங்கில் `டகு மகாராஜா' என்ற நடித்தார். தற்போது எச்.வினோத் இயக்கி வரும் ஜன நாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் குடிப்பழக்கத்தை நிறுத்தியது குறித்து பேசி இருக்கிறார். அதாவது, "நான் உண்மையிலேயே குடியை நிறுத்திவிட்டேன். கடவுள் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார். வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்காது. நான் குடிப்பதை நிறுத்திய பிறகு, ஒரு சிறந்த மனிதனாக மாறிவிட்டதாய் நினைக்கிறேன், மேலும் எனக்குத் தெரிந்த அனைவருடனும் எனது உறவு நூறு மடங்கு சிறப்பாகிவிட்டது என்றும் நினைக்கிறேன்." என்று கூறியுள்ளார்.






