

மறைந்த நடிகர் தர்மேந்திராவின் 90-வது பிறந்தநாள் - நடிகை ஹேம மாலினி உருக்கம்
சென்னை,
நடிகையும் பாஜக எம்.பியுமான ஹேம மாலினி, மறைந்த நடிகரும் கணவருமான தர்மேந்திராவின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை நினைவுகூர்ந்து உணர்ச்சி பூர்வமான பதிவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ''இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே துவங்கிய அவர், இரண்டு வாரங்களாக கணவரை(தர்மேந்திரா) இழந்த துயரத்தில் மனம் உடைந்தே வாழ்ந்து வருவதாகவும், ஆனால் அவர் ஆன்மாவாக எப்போதும் தன்னுடன் இருப்பார் என்ற நம்பிக்கை தனக்கு ஆறுதலாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
1980ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட ஹேம மாலினிதர்மேந்திரா தம்பதியருக்கு ஈஷா, ஆகனா என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த மாதம் 24 அன்று தர்மேந்திரா காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.