"இட்லி கடை" படத்தில் அந்த காட்சியை பார்த்து அழுதுவிட்டேன்- நடிகர் ஹரிஷ் கல்யாண்


இட்லி கடை படத்தில் அந்த காட்சியை பார்த்து அழுதுவிட்டேன்- நடிகர் ஹரிஷ் கல்யாண்
x

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' படம் கடந்த 1ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இட்லி கடை படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண் 'இட்லி கடை' படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, "நான் இட்லி கடை படத்தை பார்த்திருக்கேன். அதில் வரும் அந்த கன்னுக்குட்டி காட்சிக்காக தியேட்டர்களில் அழுது கைதட்டி இருக்கிறேன். கன்னுக்குட்டி திரும்ப வரும் என்று தெரிந்திருந்தும் அழுதேன். நம் உணர்ச்சிகள் எப்படி வேலை செய்கின்றன. ஒரு நடிகராக தனுஷ் சார் எப்படி நடிக்கிறார் என்பதை பார்த்து நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story