‘‘தமிழில் நடிக்கமாட்டேன் என்று சொல்லவில்லை.. கூப்பிட்டால் வரப்போகிறேன்'' - நடிகை இலியானா

இலியானா மீண்டும் நடிக்க ஆர்வம் காட்ட இருப்பதாக கூறப்படுகிறது.
இடுப்பழகை காட்டி ரசிகர்களை மயக்கியவர், இலியானா. தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ள இலியானா, தமிழில் ‘கேடி', ‘நண்பன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2023-ல் மைக்கேல் டோலன் என்பவரை திருமணம் செய்துகொண்ட இலியானா, 2 குழந்தைகளுக்கும் தாயாகிவிட்டார். இந்த ஆண்டில் எந்த படங்களுமே நடிக்காத நிலையில், தற்போது இலியானா மீண்டும் நடிக்க ஆர்வம் காட்ட இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தமிழ் சினிமாவில் படங்கள் நடிக்காமல் போனதின் காரணம் என்ன என்று கேட்டதற்கு, ‘‘நான் நடிக்கமாட்டேன் என்று சொல்லவில்லையே... கூப்பிட்டால் நான் ஓடி வரப்போகிறேன்'' என்று சிரித்தபடி கூறி சென்றார் இலியானா. இது இலியானா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
Related Tags :
Next Story






