நான் என்றென்றும் விஜய்க்கு நன்றியுடன் இருப்பேன் - ‘லியோ’ பட தயாரிப்பாளர்


நான் என்றென்றும் விஜய்க்கு நன்றியுடன் இருப்பேன் -  ‘லியோ’ பட தயாரிப்பாளர்
x

‘சிறை’ படத்தின் முன்னோட்ட விழாவில் தயாரிப்பாளர் லலித் குமார் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்

சென்னை,

நடிகர் விக்ரம் பிரபு தற்போது ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கும் சிறை படத்தில் நடித்துள்ளார். இதில், எல்.கே.அக்‌ஷய் குமார் மற்றும் அனந்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். இத்திரைப்படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், சிறை திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் லலித் குமார் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், “இன்று உலகம் முழுக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ பிரபலமாக இருக்க ஒரே காரணம் விஜய் சார் மட்டும் தான். லாக்டவுன் காலக்கட்டத்தில் அன்று ‘மாஸ்டர்’ படத்தை கொடுத்தார். அதை சரியாக ரிலீஸ் செய்தோம். அதனால் தான் ‘லியோ’ படம் கிடைத்தது. நான் என்றென்றும் தளபதி விஜய் சாருக்கு நன்றியுடன் இருப்பேன்” என்றார்.

1 More update

Next Story