

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. நான்கு பேர் அமர்ந்து கொண்டு 7 கோடி பேருக்கு பிடித்த படம் எது? பிடித்த நடிகர், பிடித்த துணை நடிகர்கள் யார்? என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்? எனக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்பதால், நான் இதை சொல்லவில்லை.
அப்படி எனக்கு விருதுகள் கொடுத்தால், போகிற வழியில் குப்பைத் தொட்டியில் வீசிவிடுவேன். ஒருவேளை அந்த விருதில் தங்கம் இருந்தால், அதை அடகு வைத்து அன்னதானம் செய்வேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.