ஜான்வி கபூருக்கு திருமணமா?.. இன்ஸ்டா பதிவால் குழப்பம்

ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘வருகிற 29-ந்தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டார்.
இந்தி சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கால்பதித்துள்ளவர் நடிகை ஜான்வி கபூர். இவர் விரைவில் தமிழ் சினிமாவிலும் தனது கணக்கை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘வருகிற 29-ந்தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டார். இதையடுத்து அவர் தனது காதல் குறித்தோ அல்லது திருமணம் தொடர்பாகவோ முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக கூறப்பட்டது. இந்த பதிவு சமூக வலைதளங்களிலும் வைரலானது.
ஆனால் தனது புதிய படம் குறித்து அறிவிப்பை அவர் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் வாழ்த்த வந்த ரசிகர்கள் ஜான்வி கபூரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story






