ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் தனுசுக்கு ஜோடி இவரா?

ராஜ்குமார் பெரியசாமி தனுஷை வைத்து உண்மை சம்பவத்தை தழுவிய படத்தை இயக்க உள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் 'இட்லி கடை' வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் தேரே இஷ்க் மெயின் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 28ந் தேதி வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து தனுஷ் 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தை `கோபுரம் பிலிம்ஸ்' சார்பில் அன்புசெழியன் தயாரிக்கிறார். 'அமரன்' படத்திற்க்குப் பிறகு, ராஜ்குமார் பெரியசாமி தனுஷை வைத்து உண்மை சம்பவத்தை தழுவி படத்தை இயக்க உள்ளார்.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






