இந்தி ‘ஹீரோக்களை’ வில்லனாக நடிக்க வைப்பது வருத்தம்- சுனில் ஷெட்டி

தென்னிந்திய திரைஉலகில் வில்லன் கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.
இந்தி ‘ஹீரோக்களை’ வில்லனாக நடிக்க வைப்பது வருத்தம்- சுனில் ஷெட்டி
Published on

மும்பை,

பாலிவுட் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சுனில் ஷெட்டி (வயது 64). அவர் அளித்த பேட்டியில், எனக்கு தென்னிந்திய திரைஉலகில் வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் வில்லன் கேரக்டர்களுக்கு வாய்ப்புகள் வருகின்றன. இந்தி ஹீரோக்களை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள். அது பார்வையாளர்களுக்கு பிடிக்கலாம். ஆனால் எனக்கு பிடிக்காத விஷயம்.

ரஜினியுடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்பதற்காக நான் அவருடன் தர்பார் படத்தில் நடித்தேன். இன்று மொழி ஒரு தடை இல்லை. தடை இருந்தால் அது உள்ளடக்கத்தின் காரணமாக இருக்கலாம். உள்ளடக்கம் நன்றாக இருந்தால் அது தடைகளையும் தாண்டி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com