’தி கேர்ள் பிரண்ட்’ படத்தை பார்த்து ஜான்வி கபூர் போட்ட பதிவு - வைரல்


Janhvi Kapoor Calls Rashmika’s The Girlfriend a “Mandatory Watch”
x

ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த ’தி கேர்ள் பிரண்ட்’ படத்தை பார்த்திருக்கிறார் ஜான்வி கபூர்.

சென்னை,

ஜான்வி கபூர், தற்போது ராம் சரணுடன் பெத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகிறது.

இதற்கிடையில், ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த ’தி கேர்ள் பிரண்ட்’ படத்தை பார்த்திருக்கிறார் ஜான்வி கபூர்.

ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் தீக்சித் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இது சமீபத்தில் இந்தி உட்பட பல மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியானது.

இந்நிலையில், அதைப் பார்த்த ஜான்வி, தனது ரிவ்யூவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவரது ரிவ்யூ சுருக்கமாக இருந்தாலும் அழுத்தமாக இருந்தது. “கட்டாயம் பாருங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story