ஜீவா நடிக்கும் "அகத்தியா" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜீவா நடிக்கும் “அகத்தியா” படம் வரும் பிப்ரவரி 28ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜீவா நடிக்கும் "அகத்தியா" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் பிளாக் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு "அகத்தியா" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜனவரி 31ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் "அகத்தியா" படம் வரும் பிப்ரவரி 28ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com