பிரபாஸின் ’பௌஜி’ படத்தில் இணைந்த 3 பிஎச்கே நடிகை?


Kannada actress confirms her presence in Prabhas’ Fauzi
x

இந்த படத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சென்னை,

பிரபாஸ், சிதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிக்கும் படம் ’பௌஜி’. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது.

ஏற்கனவே 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள இந்த படத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் சமூக ஊடக பிரபலம் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இந்தப் படம் தொடர்பாக சமீபத்தில் மற்றொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. கன்னட பாடகியும் நடிகையுமான சைத்ரா இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது.இதற்கு முன்பு, அவர் சப்த சாகரதாச்சே எல்லோ மற்றும் 3 பிஎச்கே போன்ற படங்களில் நடித்திருந்தார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயபிரதா, மிதுன் சக்ரவர்த்தி மற்றும் அனுபம் கெர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

1 More update

Next Story