"டிஎன்ஏ" படத்தின் "கண்ணே கனவே" வீடியோ பாடல் வெளியீடு


அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘டி.என்.ஏ’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

'பாணா காத்தாடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளார். தணல், இதயம் முரளி ஆகிய படங்களை தன்கைவசம் வைத்துள்ளார்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் 'டி.என்.ஏ' என்ற திரைப்படத்தில் அதர்வா நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் 5 வெவ்வேறு இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'டி.என்.ஏ' திரைப்படம் இதுவரை ரூ.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் 'டி.என்.ஏ' படத்தின் 'கண்ணே கனவே' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story