''கருப்பு'' - வைரலாகும் சூர்யாவின் செகண்ட் லுக்


Karuppu - Suriyas second look goes viral
x
தினத்தந்தி 23 July 2025 6:09 AM IST (Updated: 23 July 2025 10:32 AM IST)
t-max-icont-min-icon

இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு டீசர் வெளியாக உள்ளது.

சென்னை,

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ''கருப்பு'' படத்தின் செகண்ட் லுக் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ''கருப்பு'' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு டீசர் வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் நேற்று இரவு கருப்பு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தநிலையில், தற்போது செகண்ட் லுக் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

1 More update

Next Story