’பிளடி பெக்கர்’, ’கிஸ்’ படங்களுக்கு கிடைத்த வரவேற்பு....கவின் கருத்து


Kavin about BloodyBeggar & Kiss
x
தினத்தந்தி 7 Nov 2025 9:30 PM IST (Updated: 7 Nov 2025 9:30 PM IST)
t-max-icont-min-icon

அடுத்ததாக கவின் நடிப்பில் மாஸ்க் படம் வெளியாக உள்ளது.

சென்னை,

நெல்சன் தயாரிப்பில் கவின் நடிப்பில் வெளியான படம் 'பிளடி பெக்கர்'. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கிஸ். பிரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கவின் நடிப்பில் மாஸ்க் படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் புரமோஷனின்போது பேசிய கவின் ’பிளடி பெக்கர்’, ’கிஸ்’ படங்களுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி கருத்து கூறினார். அவர் பேசுகையில்,

"பிளடி பெக்கர் வேறு தேதியில் வெளியாகி இருந்தால், நல்ல வரவேற்பு கிடைத்திருக்கலாம். ஓடிடியில், நல்ல வரவேற்பு கிடைத்தது. கிஸ் -க்கு தயாரிப்பு தரப்பிலிருந்து எங்களுக்கு இன்னும் ஆதரவு கொடுத்திருக்கலாம், சரியான ரிலீஸ் தேதி படத்திற்கு மேலும் உதவியிருக்கும்" என்றார்

1 More update

Next Story