’சூர்யா 46’ படத்தில் இணைந்த கேஜிஎப் நடிகை

இவர் இதற்கு முன்பு 'சாது' மற்றும் 'ஆளவந்தான்' ஆகிய 2 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
சென்னை,
''லக்கி பாஸ்கர்'' இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து தனது 46-வது படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா46 என்று பெயரிடப்பட்டுள்ளது. மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்படத்தில் கேஜிஎப் பட நடிகை ரவீனா தாண்டன் இணைந்திருக்கிறார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா46 படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது. ரவீனா தாண்டன் இதற்கு முன்பு 'சாது' மற்றும் 'ஆளவந்தான்' ஆகிய 2 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
சூர்யாவின் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ''கருப்பு''. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.






