மைத்ரி மூவி மேக்கர்ஸின் "கிஸ் கிஸ் கிஸ்ஸிக்" டிரெய்லர் வெளியீடு

தெலுங்கு நடிகர் சுஷாந்த் நடிப்பில் உருவான 'கிஸ் கிஸ் கிஸ்ஸிக்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Published on

விதி ஆச்சார்யா தயாரிப்பில் சிவ் ஹரே இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் 'கிஸ் கிஸ் கிஸ்ஸிக்'. புஷ்பா 2 பாடல் வரிகளில் இருந்து இந்தப் படத்தின் தலைப்பை வைத்துள்ளார்கள்.

நாயகன் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்தால் அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் திருமணம் ஆகிவிடும். அதனால் நாயகன் சந்திக்கும் பிரச்னைகளை நகைச்சுவை கலந்து படமாக்கியுள்ளார்கள். .மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை வழங்குகிறது. இந்தப் படத்தில் ஜான்யா ஜோஷி, விதி நடித்துள்ளார்கள்.நிதின் நிட்ஸ் அரோரா இசையமைத்துள்ளார்.

"பிண்டு கி பாப்பி" என்ற இந்தி திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "கிஸ் கிஸ் கிஸ்ஸிக்" என்ற பெயரில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் சுஷாந்த், ஜான்யா ஜோஷி மற்றும் விதி, விஜய் ராஸ், முரளி ஷர்மா, சுனில் பால், அலி அஸ்கர், அஜய் ஜாதவ், பூஜா பானர்ஜி, அதிதி சன்வால், ரியா எஸ். சோனி, ஊர்வசி சௌஹான், பியூமோரி மேதா தாஸ், முக்ஷ்வர் மேத்தா தாஸ் மற்றும் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வரும் 21ம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com