வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் 'லோகா' பட நடிகை

இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ''தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இப்படம் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது.இப்படமும் அவரது பாணியில் நகைச்சுவையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'லோகா' பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் - கல்யாணி இருவரும் 'ஹீரோ' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






