கவினின் 9வது படத்தில் இணைந்த “லோகா” பட நடிகர்

கவினின் புதிய படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கின்றார்.
கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் கவின்-பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓப்ரோ இசையமைக்கிறார். பேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். இப்படம் கவினின் 9-வது படமாகும்.
கவின் மற்றும் பிரியங்கா மோகன் முதன்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்தின் அறிவிப்பு வெளியான உடனே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கவினின் 9வது படத்தில் நடன மாஸ்டர் சாண்டி இணைந்திருப்பதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘பிக் பாஸ்’ தமிழ் சீசன் 3-ல் தங்களின் நட்பின் மூலம் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்த நடிகர்கள் கவின் மற்றும் சாண்டி ஆகியோர் புதிய படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த 2025ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "லோகா" திரைப்படத்தில் வில்லனாக நடித்த சாண்டியின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.






