மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ சோதனைக்கு வர வேண்டும் - ஜாய் கிரிசில்டா

மாதம்பட்டி ரங்கராஜ் 4 முறை கருவை கலைக்க வற்புறுத்தியதாக ஜாய் கிரிசில்டா கூறினார்.
சென்னை,
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கும் இடையேயான பிரச்சினை கடந்த சில மாதங்களாக நிலவி வருகிறது.
சமீபத்தில் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்துத் திருமணம் செய்ததையும் , குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதை ஒப்புக்கொண்டதாகவும் ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இன்று இதனை முற்றிலும் மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், டிஎன்ஏ பரிசோதனைக்கு தயார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ சோதனைக்கு வர வேண்டும் என ஜாய் கிரிசில்டா பேசியுள்ளார். அவர் கூறுகையில்,
“ மாதம்பட்டி ரங்கராஜ் 4 முறை என்னை கருவை கலைக்க வற்புறுத்தினார். அவர் கொடுத்த அழுத்தத்தால் முன்கூட்டியே பிரசவம் நடந்தது. எனது குழந்தை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ சோதனைக்கு வர வேண்டும். யாருடைய பின்புலத்தில் ரங்கராஜ் நடந்துகொள்கிறார் என தெரியவில்லை" என்றார்.






