"மகா காளி'யாக பூமி ஷெட்டி...வைரலாகும் பர்ஸ்ட் லுக்

மகா காளியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
'MAHAKALI' TEAM TO UNVEIL LEAD CHARACTER'S FIRST LOOK
Published on

சென்னை,

பான் இந்திய படமாக வெளியான அனுமான் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரசாந்த் வர்மா. இந்தப் படத்தில் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை உருவாக்கினார். இந்த யுனிவர்ஸில் 3ஆவது படமாக மகா காளி தயாராகி வருகிறது.

இந்தப் படத்துக்கான கதையை இயக்குநர் பிரசாந்த் வர்மா எழுத பூஜா அபர்ணா கொலுரு இயக்குகிறார். ஆர்கேடி ஸ்டூடியோஸ் சார்பாக ரிவாஸ் ரமேஷ் டுக்கல் தயாரிக்கிறார்.

முன்னதாக இப்படத்தில் 'அசுரகுரு சுக்ராச்சார்யா' ஆக அக்சய் கண்ணா நடிக்கும் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தநிலையில், தற்போது மகா காளியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் மகா காளியாக நடிகை பூமி ஷெட்டி நடிக்கிறார்.

கன்னட படமான இக்கத் (2021) மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூமி ஷெட்டி. சமீபத்தில் வெளியான கிங்டம் படத்தில் சத்ய தேவின் மனைவி கவுரி வேடத்தில் இவர் நடித்திருந்தார். இப்போது மகா காளியாக நடிக்கும் பெரிய வாய்ப்பு பூமி ஷெட்டிக்கு கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com