சிரஞ்சீவி - நயன்தாரா படத்தின் 2-வது பாடல்...வெளியாகும் தேதி அறிவிப்பு


Mana Shankara Vara Prasad Garu: Sasirekha song gets a date
x

இப்படத்தின் முதல் பாடல் "மீசால பில்லா" இணையத்தில் படு வைரலானது.

சென்னை,

சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள "மன சங்கர வர பிரசாத் கரு" படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான முதல் பாடல் "மீசால பில்லா" இணையத்தில் படு வைரலானது. இப்போது, ​​ இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது.

"சசிரேகா" என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டாவது பாடல் வருகிற 8 ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு முன்னதாக 6-ம் தேதி (நாளை) இப்பாடலின் புரோமோ வெளியாகிறது.

அனில் ரவிபுடி இயக்கிய “மன சங்கர பிரசாத் கரு” படம் அடுத்தாண்டு பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஷைன் ஸ்க்ரீன்ஸ் மற்றும் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் சாஹு கராபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

1 More update

Next Story