’அருந்ததி போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை’...பிரபல நடிகை

இந்த நடிகையின் படங்கள் தோல்வியடைந்திருந்தாலும், ஸ்டார் ஹீரோயின் ரேஞ்சில் ஒரு மதிப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.
சென்னை,
ஒரே ஒரு படத்தில் நடித்து நட்சத்திரங்களாக மாறிய நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த படம் வெற்றிபெற்றால்தான் அது நடக்கும். ஆனால் இந்த நடிகையின் படம் தோல்வியடைந்திருந்தாலும், ஸ்டார் ஹீரோயின் ரேஞ்சில் ஒரு மதிப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.
அவரது முதல் படம் தோல்வியடைந்து. ஆனால், அவருடைய நடிப்பு மற்றும் அழகு ரசிகர்களை கவர்ந்தது. இப்போது இந்த நடிகைக்கு தொடர் வாய்ப்புகள் வந்துக்கொண்டு இருக்கின்றன . இந்த நடிகை யார் தெரியுமா?
அவர்தான் பாக்யஸ்ரீ போர்ஸ். ரவி தேஜா நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான பாக்யஸ்ரீ, தற்போது அதிகம் விரும்பப்படும் கதாநாயகியாக மாறிவிட்டார். சமீபத்தில் வெளியான காந்தா படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார்.
தற்போது, இவர் ராம் பொதினேனி ஹீரோவாக நடிக்கும் ’ஆந்திரா கிங் தாலுகா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள், போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்தப் படம் வருகிற 27-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், பாக்யஸ்ரீயின் சமீபத்திய கருத்துக்கள் வைரலாகியுள்ளன. சமீபத்தில் இவர் ஒரு நேர்காணலில், ‘அருந்ததி’ போன்ற படங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறினார். அனுஷ்கா நடித்த அருந்ததி போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று அவர் கூறினார். பாக்யஸ்ரீயின் ஆசை நிறைவேறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






