’லோகா படத்தை தெலுங்கில் எடுத்திருந்தால், தோல்வியடைந்திருக்கும்’ - பிரபல தயாரிப்பாளர்

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது.
Naga Vamsi: If Lokah was made in Telugu, it would have been a flop
Published on

சென்னை,

பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதற்கு பெயர் பெற்றவர். அதனால்தான் சிலருக்கு அவரைப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. தற்போது ரவி தேஜாவின் மாஸ் ஜாதராவின் பிரமோஷனின்போது, அவர் ஒன்றல்ல, பல கருத்துகளை கூறினார். அவை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறுகையில், "இந்த கருத்துக்காக மக்கள் என்னை கண்டிப்பாக திட்டுவார்கள் என்பது எனக்குத் தெரியும். லோகா தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தால் மக்கள் பல குறைகள் சொல்லி இருப்பார்கள். நிச்சயமாக படத்தை தோல்வியடையச் செய்திருப்பார்கள் என்றார்.

சுவாரஸ்யமாக, கல்யாணி பிரியதர்ஷன் நடித்த இந்த படத்தை தெலுங்கில் தனது சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர் மூலம் வெளியிட்டார் நாக வம்சி. அங்கு நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com