ரிலீஸ் தேதியை அறிவித்த சம்யுக்தா மேனனின் புதிய படம்

இப்படத்தில் சம்யுக்தா, சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
Nari Nari Naduma Murari, hitting theatres January 14th, 2026
Published on

சென்னை,

கடந்த 1990-ம் ஆண்டு நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் "நரி நரி நடுமா முராரி". இது அவரது கெரியரில் மறக்கமுடியாத படங்களில் ஒன்று. 'எங்கேயும் எப்போதும்'பட நடிகர் ஷர்வானந்தின் 37வது படத்திற்கு "நரி நரி நடுமா முராரி" எனப்பெயரிடப்பட்டுள்ளது.

அனில் சுங்கராவின் ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா தயாரிக்கும் இப்படத்தை சமாஜவரகமனா புகழ் ராம் அப்பாராஜு இயக்குகிறார். சம்யுக்தா, சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com