துல்கர் சல்மானின் வேபேரர் சினிமாடிக் யுனிவர்ஸில் நஸ்லேன் - கல்யாணி?


Naslen - Kalyani in Dulquer Salmaans Weber Cinematic Universe?
x

இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் அடுத்த படத்தை வெளியிட தயாராகி வருகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது துல்கர் சல்மானின் வேபேரர் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், துல்கர் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் இப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது, சினிமாடிக் யுனிவர்ஸ் குறித்த வதந்திகளை மேலும் தூண்டி இருக்கிறது.

டொமினிக் அருண் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story