காஸ்டிங் ஏஜென்டுகள் விவகாரம்: சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் எச்சரிக்கை


காஸ்டிங் ஏஜென்டுகள் விவகாரம்: சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Oct 2024 7:05 AM GMT (Updated: 2 Oct 2024 8:53 AM GMT)

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அவர் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்டுகள் (Casting Agents) நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.

இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story