'சந்திரா'-வுக்கு பிறகு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை - ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியாவின் கெரியரிலேயே முக்கியமான படம் வடசென்னை.
'சந்திரா'-வுக்கு பிறகு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை - ஆண்ட்ரியா
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இப்போது பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவரது கெரியரிலேயே முக்கியமான படம் வடசென்னை. 2018ம் ஆண்டு வெளியான இந்த படத்தினை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

இதில் அமீரின் மனைவியாக சந்திரா என்ற கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். தனது கணவரை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக காத்திருப்பதும், கிடைக்கும் சந்தர்ப்பத்தையெல்லாம் தனக்காக மாற்றிக்கொள்வதும் என ஆண்ட்ரியாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், நடிகை ஆண்ட்ரியா அளித்திருக்கும் பேட்டி ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் அளித்த பேட்டியில், "வட சென்னை படத்தில் நான் நடித்த 'சந்திரா' கதாபாத்திரத்துக்குப் பிறகு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை. ஆனால் பாராட்டுகள் கிடைத்தது. ஏனென்றால் என்னை வைத்து என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை. உண்மையில் பல நடிகர்கள், அவர்கள் படங்களில் பவர்புல் பெண் கதாபாத்திரத்தை விரும்புவதில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், இவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும், நடிகர் கவினுடன் இணைந்து மாஸ்க் என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com