கார்த்தியின் "மார்ஷல்" படப்பிடிப்பு தளத்தில் சோகம்

"மார்ஷல்" படத்தின் படப்பிடிப்பு தளத்தில், ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் நடிகர் கார்த்தியின் "மார்ஷல்" படத்தின் படப்பிடிப்பு தளத்தில், ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலிருந்து வந்த அய்யநாதன், தாம் தங்கியிருந்த திருமண மண்டபத்தின் மாடியில் இருந்து மதுபோதையில் தவறி விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
நடிகர் கார்த்தி-டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் கூட்டணியில் உருவாகி வரும் படம் "மார்ஷல்". இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
Related Tags :
Next Story






