ஆன்லைன் வன்முறைக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்- நடிகை ஹுமா குரேஷி

சமூக வலைதளங்களில் பிகினியில் ஒரு புகைப்படத்தை வெளியிடுங்கள் என கேட்கிறார்கள்.
ஆன்லைன் வன்முறைக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்- நடிகை ஹுமா குரேஷி
Published on

ஆன்லைன் வன்முறை மற்றும் அதை எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து நடிகை ஹுமா குரேஷி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சமூக வலைதளங்களில் பிகினியில் ஒரு புகைப்படத்தை வெளியிடுங்கள் என கேட்கிறார்கள். இது போன்ற கேள்விகள் அருவருப்பானது மற்றும் வருத்தம் அளிக்கிறது. ஆன்லைன் துன்புறுத்தலுக்கு தண்டனையாக பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவதற்கு வழங்கும் தண்டனை போலவும், நடுரோட்டில் துன்புறுத்தப்படுவதற்கு வழங்கும் தண்டனை போலவும் தண்டிக்க வேண்டும். இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஆபாச படங்களை அனுப்பி மோசமான கருத்துக்களை எழுதினால் பொதுவில் தவறாக நடந்து கொள்பவருக்கு கிடைக்கும் அதே தண்டனையை நீங்கள் பெற வேண்டும். தயவு செய்து ஒரு பெண்ணின் உடைகள், மேக்கப் வேலை, வாழ்க்கை முறை மற்றும் எடை குறித்து ஆலோசனை வழங்குவதை நிறுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com