’பராசக்தி’ - முதல் பாடல் ‘அடி அலையே’ புரோமோ வெளியீடு


Parasakthi FIRST SINGLE PROMO OUT NOW
x

ஜனவரி 14-ந்தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

’பராசக்தி’ படத்தின் முதல் பாடல் ‘அடி அலையே’ புரோமோ வெளியாகி உள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந்தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தநிலையில், ’பராசக்தி’ படத்தின் முதல் பாடலான ‘அடி அலையே’ புரோமோ வெளியாகி உள்ளது. முழு பாடல் வருகிற 6-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story