"ஸ்பிரிட்" படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்


ஸ்பிரிட் படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
x

பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

ஐதராபாத்,

பிரபாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா முதன்முறையாக இணைந்து உருவாக்கும் திரைப்படம் "ஸ்பிரிட்". சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

பிரபாஸ் படப்பிடிப்பு தளத்தில் தற்போது இணைந்துள்ளார். மூன்று முதல் நான்கு நாட்களில் இப்படப்பிடிப்பில் பிரபாஸ் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

போதைப்பொருள் மாபியாவைச் சுற்றி வரும் ஒரு கிரைம் படம் என்று கூறப்படும் “ஸ்பிரிட்”-ல் பிரபாஸ் ஒரு போலீஸ்காரராக நடிக்கிறார். மேலும், பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

வங்காவின் முந்தைய பிளாக்பஸ்டர் படமான அனிமல் படத்தில் 2-வது நடிகையாக நடித்த பிறகு திரிப்தி டிம்ரி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். அவர் இந்தப் படத்தில் ரன்பீர் கபூருடன் நடித்திருந்தார்.

மேலும், “ஸ்பிரிட்”-ல் பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கொரிய சூப்பர் ஸ்டார் டான் லீயும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story