பிரதீப் ரங்கநாதனின் "டியூட்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 25 July 2025 8:44 PM IST (Updated: 26 July 2025 11:39 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை 'டியூட்' படக்குழு பகிர்ந்துள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு, 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி நடித்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான 'டிராகன்' படம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டியூட்' படத்தில் நாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதனும் நாயகியாக மமிதா பைஜு நாயகியாக நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

இந்நிலையில், இன்று பிரதீப் ரங்கநாதன் பிறந்த நாளை படக்குழு கொண்டாடியுள்ளது. அதன் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தில் நடிகை மமிதா பைஜூ உள்பட நடிகர் நடிகைகள் பங்கேற்றுள்ளனர். தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட இந்தப் பதிவில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story